Home / சிரிப்போ சிரிப்பு / கொஞ்சம்சிரியுங்கபாஸ்!

கொஞ்சம்சிரியுங்கபாஸ்!

7

தான் படிக்கும் பள்ளியில்.. நுழைய முயன்ற ஒரு மாணவனை தடுத்து நிறுத்திய ஆசிரியை.. அவனிடம் கேட்டார்…

ஏன்டா லேட்..??

பையன்;- வீட்ல பிரச்சினை அதான்..!!

டீச்சர்;- என்ன பிரச்சினை..??

பையன்;- பாட்டி செத்துட்டாங்க.. அதான் பிரச்சினை..?

டீச்சர்;- அதிலென்ன பிரச்சினை..?

பையன்;- எரிக்கிறதா,, புதைக்கிறதான்னு தான் பிரச்சினை..?

டீச்சர்;- அதிலென்ன பிரச்சினை..?

பையன்;- எரிச்சா பிரச்சினை இல்ல.. புதைச்சா தான் பிரச்சினை..?

டீச்சர்;- அதிலென்ன பிரச்சினை..??

பையன்;- புதைச்ச இடத்துல.. புல்லு முளைக்குமா.. முளைக்காதான்னு தான் பிரச்சினை..!!

டீச்சர்;- அதிலென்ன பிரச்சினை..?

பையன்;- புல்லு முளைக்காட்டி பிரச்சினை இல்ல.. புல்லு முளைச்சா தான் பிரச்சினை..?

டீச்சர்;- அதிலென்ன பிரச்சினை..??

பையன்;- முளைச்ச புல்லை மாடு திங்குமா.. திங்காதான்னு தான் பிரச்சினை..!!

டீச்சர்;- அதிலென்ன பிரச்சினை..?

பையன்;- மாடு திங்கலைன்னா பிரச்சினை இல்ல.. தின்னா தான் பிரச்சினை..?

டீச்சர்;- அதிலென்ன பிரச்சினை..??

பையன்;- அந்த இடத்துல முளைச்ச புல்லை தின்ன மாடு பிழைக்குமா.. பிழைக்காதான்னு தான் பிரச்சினை..?

டீச்சர்;- அதிலென்ன பிரச்சினை..?

பையன்;- மாடு.. பிழைச்சுட்டா பிரச்சினை இல்ல.. மாடு செத்தா தான் பிரச்சினை..??

டீச்சர்;- அதிலென்ன பிரச்சினை..??

பையன்;- வேற என்ன..? எரிக்கிறதா,, புதைக்கிறதான்னு தான்..??

டீச்சர்;- ????