Home / சுவாரசியம் வீடியோ / நீரின் மீது ஓடும் அதிசயப் பெண்!video

நீரின் மீது ஓடும் அதிசயப் பெண்!video

dq

நீரில் நடப்பேன், நெருப்பில் குளிப்பேன், வானத்தை வில்லாக வளைப்பேன், மணலை கயிறாக்குவேன் என சில வாய்ஜாலப் பேர்வழிகள் சவடால் அடிப்பதுண்டு. இதில் முதல் சவடால் சாத்தியமானதே.., என்பதை நிரூபிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேக்கியாவை சேர்ந்த லெங்கா டான்னர் என்ற பெண் நீரின் மீது நடந்தும், ஓடியும் சாதனை படைத்து வருகிறார்.

28 வயது நீச்சல் வீராங்கனையான இவர், சுமார் 20 ஆண்டுகால தீவிர பயிற்சியின் மூலம் நீரில் நடப்பது மற்றும் ஓடுவது போன்ற ஜால வித்தைகளை வெகு சாதாரணமாக நிகழ்த்தி அனைவரையும் பரவசத்துக்குள்ளாக்குகிறார்.

இதில் ஒரு தலைகீழ் மாற்றம் என்னவென்றால்.., நீருக்குள் தலைகீழாக பாயும் லெங்கா டான்னர், நீரின் ஆழத்தில் இருந்து உந்தி, மேல்பகுதிக்கு வரும்போது கை,கால்களை அசைத்து நீந்துவதற்கு பதிலாக, நாம் சாதாரணமாக தரையின் மீது நடப்பதுபோல், நடந்தும், ஓடியும் மேல்பரப்பை வந்தடைகிறார்.