Home / பொக்கிஷத்தில் தாயகம் / பிரபாகரன் மரணம்: மரண சான்றிதழ் வேண்டும்!

பிரபாகரன் மரணம்: மரண சான்றிதழ் வேண்டும்!

pira

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 7 ஆண்டுகளுக்கு முன்பு இறுதி கட்ட போர் நடந்தது. அதில் விடுதலைப்புலி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர்கள் அவரது சடலத்தை இலங்கை ராணுவம் ஊடகங்களிலும் வெளியிட்டது. மேலும் இத்தகவலை இலங்கை அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால் அவர் மரணம் அடையவில்லை வெளி நாட்டில் தங்கியுள்ளார் என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இச்சர்ச்சை கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

ஆனால், பிரபாகரன் உயிரிழக்கவில்லை அவர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என இலங்கை மந்திரி விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த இவர் சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது

‘இலங்கை இறுதிகட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்தாக கூறப்படுவதை நம்பமுடியவில்லை. எத்தனையோ பேருக்கு மரண சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரபாகரன் இறந்து விட்டதாக மரண சான்றிதழ் வழங்கவில்லை.

எனவே, மரண சான்றிதழ் கொடுத்தால் தான் அவர் இறந்து விட்டதாக என்னால் நம்ப முடியும் என்றார்

அவரது இக்கருத்து இலங்கையில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அத்தகைய கருத்துக்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியா ராச்சி கூறியுள்ளார்.