Home / சுவாரசியம் வீடியோ / 18 முறை உடைகளை மாற்றி புதிய உலக சாதனை!

18 முறை உடைகளை மாற்றி புதிய உலக சாதனை!

gh

 

 

சீனாவின் உள்ள பொழுதுப்போக்குப் பூங்காவில் மலேசியா நாட்டைச் சேர்ந்த மேஜிக் பெண் ஒரே நிமிடத்தில் 18 முறை உடைகளை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

சீனாவில் ஒருவாரகால தேசிய விடுமுறை விரைவில் வரவுள்ள நிலையில் மக்களை மகிழ்விக்க அங்குள்ள பொழுதுப்போக்கு பூங்காக்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அதுபோல ஹுபேய் மாகாணத்தில் உள்ள ஹேப்பி வேல்லி பொழுதுப்போக்குப் பூங்காவில் மேஜிக் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சில் பங்கேற்ற மலேசியா நாட்டைச் சேர்ந்த மேஜிக் பெண் ஒரே நிமிடத்தில் 18 உடைகளை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

மேடையின் தோன்றும் போது அணிந்திருந்த கருப்புநிற உடையுடன் சேர்த்து மொத்தம் 19 உடைகளில் ஒரு பெண் தோன்றியுள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த அவேரி சின் மற்றும் சில்வியா லிம் ஆகியோர் ஒரே நிமிடத்துக்குள் இந்த சாகச நிகழ்ச்சியை செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.