Home / பொக்கிஷத்தில் தாயகம் / தமிழ் எழுத்தை கணனிக்கு கொண்டு வந்தவர் !

தமிழ் எழுத்தை கணனிக்கு கொண்டு வந்தவர் !

ao9
மண்ணுக்காக உழைத்த பலரின் உழைப்பு இலை மறை காய் போல் மறைமுகமாக எம் மக்களுக்காக விதைக்கப்பட்டுளளதை ஒருவரின் மறைவின் பின்பே அறிய நேருவது வேதனையான ஒன்று.

ஒருவரை அறிஞராக அறிந்திருப்போம். ஆனால் அவரின் தேசிய பணிகள் பற்றி மறைவின் பின் ஆழமாக அறிகையில் அவரின் மேல் மதிப்பு இரட்டிப்பாகின்றது.

ஒரு அறிஞராக, பேராசிரியராக, நல்ல மனிதராக அறிந்திருந்த கணித மேதை சி. விஜயகுமார் பற்றி அவரின் மறைவுக்கு பின்பு அறிந்த தகவல் அவரின் இழப்பின் கனதியை ஆழமாக உணர்த்தியது.

உலகில் மூத்த மொழியான தமிழ் இந்தியா, இலங்கை நாடுகளில் உள்ள பல தேச மொழிகளில் முதன் முதலாக கணனிப் பயன்பாட்டுக்கு எழுத்துருப்பெற்று பயன் பெற்ற மொழியும் என்பது தமிழுக்கான சிறப்பு. .

அந்த எழுத்துருவை முதன் முதலில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ விடுதலைக்காக மட்டுமன்றி கணினி தமிழுக்கும் அரும் பங்காற்றிய அவர்களுக்கு பின்புலமாக இருந்தவர் முன்னாள் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான கணிதமேதை சி.விஜயகுமார் அவர்கள்.

இவர் நேற்று ரொரன்ரோவில் காலமானார்.

1980களின் இறுதியில் இந்திய இராணுவத்துதோடு புலிகள் உக்கிரபோரில் ஈடுபட்டிருந்தவேளை புலம்பெயர் நாடுகளில்; தமிழர்களின் போராட்ட செய்திகளை தாயக மக்கள் குறித்த செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல கனடிய மண்ணில் இயங்கிய தமிழர் அமைப்புகள் செய்தி ஏடுகளை நடத்தி வந்தனர்.