Home / பொக்கிஷத்தில் தாயகம் / புலிகள் அமைப்பின் மீதான தடை,எந்த அடிப்படியில் தடை நீக்கப்பட்டது !

புலிகள் அமைப்பின் மீதான தடை,எந்த அடிப்படியில் தடை நீக்கப்பட்டது !

te
ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது
எந்த அடிப்படியில் தடை நீக்கப்பட்டது !
2014-இல் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியபோதிலும், தமிழினத்திற்கு எதிரான பகை உணர்ச்சியும் பழிவாங்கும் வெறியும் கொண்ட இலங்கை அரசு, அத்தடையை நீக்க வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத் தலைமை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
அந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று தடை நீக்க ஆணையை உறுதி செய்து, தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில் நீதிமன்றம் சொன்ன காரணம், மிகவும் உண்மையான இயல்பான காரணமாகும். 2009-க்குப் பிறகு, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்படவில்லை. அந்த அமைப்பின் சார்பில் உலகில் எங்கேயும் வன்முறை நடக்கவில்லை. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் வன்முறை நடக்கவில்லை. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை தேவையற்றது என்று கூறியுள்ளது.