Home / பொக்கிஷத்தின் குறுந்தகவல் / உலகின் பெரிய டைனாசர் படிமம் கண்டுபிடிப்பு!

உலகின் பெரிய டைனாசர் படிமம் கண்டுபிடிப்பு!

உலகின் பெரிய டைனாசர் படிமம் கண்டுபிடிப்பு

 தென் அமெரிக்காவில் உள்ள, அர்ஜென்டினாவில், உலகின் மிகப் பெரிய, 122 அடி நீளமுள்ள டைனாசர் படிமத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தெற்கு அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டைனாசர், தாவர உண்ணி இனத்தை சேர்ந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனாசர் வகைகளில், இது, மிகப் பெரியது; நீண்ட கழுத்தை உடையது. அர்ஜென்டினாவில் உள்ள, படிம அருங்காட்சியகத்தை சேர்ந்த விஞ்ஞானி, டியாகோ போல் கூறியிருப்பதாவது:அர்ஜென்டினாவின், பாட்கோனியா பிராந்தியத்தில், ‘மேயோரம்’ இனத்தை சேர்ந்த டைனாசரின் படிமம் கிடைத்துள்ளது. 122 அடி நீளம், 20 அடி உயரம், 76 ஆயிரம் கிலோ எடை உடைய, இந்த மெகா டைனாசர், மெதுவாக நடக்கக்கூடியது. 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய, இந்த வகை டைனாசர்களுக்கு, நிற்பது, நடப்பது, திரும்புவது மற்றும் ஓடுவது பெரும் சவாலாக இருந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.