Home / பொக்கிஷத்தின் குறுந்தகவல் / தமிழர் படைப்பு – அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு!

தமிழர் படைப்பு – அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு!

aas

உலகில் உள்ள மற்ற எந்த நாகரிகம் மக்களை காட்டிலும் ஆழ்ந்த அறிவும், திறமையும் கொண்டவர்களாய் இந்த பூமியில் திகழ்ந்தவர்கள் தமிழர்கள்.

அதற்கு ஆதாரமாக யாராலும் அவிழ்க்க முடியாத பல்வேறு ரகசிய முடிச்சுகள் தமிழக கோவில்களில் கலை படைப்புகளாக காணப்படுகின்றன.

ஆனால், அவற்றையெல்லாம் தற்போது உள்ள தமிழர்களால் கூட யூகித்து பார்க்க முடியாத அளவிற்கு அதிசயங்கள் நிறைந்தவையாக காணப்படுகின்றது.

அதின் ஒன்றுதான் இந்த படத்தில் காணப்படும் தமிழக கோவிலில் உள்ள கலை பொக்கிஷம்.

இதில், விமானத்தின் கூரையில் எட்டு கிளிகள், எட்டு திசைகளுக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுளள்து.

இதன் நடுவில் அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை கைகளால் சுற்றினால் அது சுற்றும். ஆனால் கையில் வராது! ஆனால் அது அந்த கல்லின் ஒரு பகுதிதான்.

இந்த சிற்பத்தை சுற்றி அழகிய சிறிய வடிவிலானா கிளியின், சிற்பங்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றது. அதுவும் அதே கல்லில் தான் மேலும், அதே கல்லில் சுற்றிலும் கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலிகள் தொங்குகின்றன.

இந்த சிற்பத்தில் ஆச்சர்யம் என்னவென்றால். இவை அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

இப்படி பட்ட அதிசய சிற்பக்கலை தமிழர்களுக்கு எவ்வாறு சாத்தியமானது என்பதுதான், இதனை பார்க்கக்கூடிய அயலார்களின் கருத்தாக உள்ளது.

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சிற்பம் அமைந்துள்ள இடம், அர்த்தனாரீஸ்வரர் கோயில், “திருக்கொடி மாடச் செங்குன்றூர்” ஊர்ப் பெயர் புரியவில்லையா ? (திருச்செங்கோடு) நாமக்கல்