Home / பொக்கிஷத்தின் குறுந்தகவல் / மலேசியாவில் தமிழ் வழி பள்ளிகள் அதிகரிப்பு!

மலேசியாவில் தமிழ் வழி பள்ளிகள் அதிகரிப்பு!

klp

மலேசியாவில் தமிழ் வழி பள்ளிகள் அதிகரித்து வருவதாக கோலாலம்பூரில் நடந்த உலகத்தமிழ் இணைய மாநாட்டில் பேசிய மலேசிய போக்குவரத்து துறை சிறப்பு ஆலோசகர் தெரிவித்தார்.

மாநாட்டில் மலேசிய போக்குவரத்து துறை சிறப்பு ஆலோசகர் எம்.கேவியஸ் பேசுகையில்: இந்த மாநாடு இணையத்தையும், தமிழையும் கற்றல் கற்பித்தலில் இணைக்கும் முயற்சி ஆகும். இது ஒரு தமிழ் திருவிழா. இது தமிழர்களின் அங்கீகாரத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும். உலகத்தமிழர்கள் இடையே அன்பும், நட்பும் மேலும் வலுவடையும். தமிழ் மொழியின் தட்டச்சு, மெய்நிகர் கல்வி, தொழில்நுட்பம் மேலும் வளரும்.

மலேசியாவில்527 தமிழ் வழி பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் புதிதாக 7 பள்ளிகள் அமைக்கப்படடுள்ளன. அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் இந்த மாநாட்டின் ஆய்வுக்கட்டுரை புத்தகம் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.