Home / பொக்கிஷத்தின் குறுந்தகவல் / கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

கீழடி, அகழாய்வு, மதுரை ஐகோர்ட் கிளை, உத்தரவு

கீழடியில் 4ம் கட்ட அகலாய்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கு:

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் 3ம் கட்ட அகழாய்வு பணிகளை வரும் செப்.,30ம் தேதிக்குள் முடித்து கொள்ள தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அங்கு அருங்காட்சியகம் அமைக்கவும், அகழாய்வு பணிகளை தொடரவும் கனிமொழி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்

நாளை:

இதன் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளிக்க வேண்டும். மாநில தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இந்த வழக்கில் நாளை(செப்., 22) விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் நில உரிமையாளர்களை எதிர்மனுதாரராக சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.