Home / சிரிப்போ சிரிப்பு / உ.பி.,யில், 100 அடி உயர மோடி சிலை மற்றும் கோவில் !

உ.பி.,யில், 100 அடி உயர மோடி சிலை மற்றும் கோவில் !

 மீரட்டில்,100 அடி,உயர, 'மோடி ,மந்திர்'

நாட்டின் வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி ஆற்றிய அரும்பணிகளை பாராட்டி, உ.பி.,யில், 100 அடி உயர மோடி சிலை மற்றும் அவரது பெயரில் கோவில் கட்ட, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
திட்டமிட்டு உள்ளார்.

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற பொறியாளர், ஜே.பி.சிங், பிரதமர் மோடியின், மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, பிரதமரின் தீவிர ரசிகராக மாறி உள்ளார். இதையடுத்து, தான் வசிக்கும் மீரட்டில், பிரதமர் மோடிக்கு, 100 அடி உயர சிலை நிறுவி, மோடியின் பெயரில் கோவில் கட்டவும் திட்டமிட்டு உள்ளார்.

இது குறித்து, ஜே.பி.சிங் கூறியதாவது:

கடந்த, 70 ஆண்டுகளாக, நாடு, மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. பிரதமராக, மோடி பொறுப்பேற்றதும், பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், மக்கள்
பலனடைந்து உள்ளனர். மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மோடியை, கவுரவிக்கும் வகையில், அவருக்கு, பிரமாண்ட சிலை வைத்து, அவரது பெயரிலேயே, கோவில் கட்டவும் திட்டமிட்டு உள்ளேன்.

மீரட்டில், 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள, இந்த கோவில் வளாகத்தில், 100 அடி உயர, மோடி சிலை நிறுவப்படும். அவர் மனிதர் என்பதால், கோவிலின் உள்ளே, மோடியின்
விக்ரகம் இடம் பெறாது. அவரது சிலைக்கு வழிபாடும் நடைபெறாது.இவ்வாறு அவர் கூறினார்.