Home / இலங்கைச்செய்திகள் / ஆட்கொணர்வு மனு விசாரணைகள் ஒத்திவைப்பு!

ஆட்கொணர்வு மனு விசாரணைகள் ஒத்திவைப்பு!

cri6

யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டவர்களை தமது உறவுகளை மீள விடுவிக்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆட்கொணர்வு மனு விசாரனைகள் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளன

இவ் பன்னிரன்டு மனுக்களில் ஒன்பது பேரது மனுக்கள் ஏற்கனவே அநுராதபுரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ள நிலையில் அவ் ஒன்பது மனுக்களையும் நிராகரித்து ஏனைய மூன்று வழக்குகள் மீதான விசாரனையும் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

இன்றைய தினம் மன்றில்  சட்டத்தரணி சுபாஜினி கிஷோர் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இவ் ஆட்கொணர்வு மனுவில்  சட்டத்தரணி குருபரன் மனுத் தொடர்பாக விவாதம் செய்திருந்தார்.

இதன்படி அவ் ஆட்கொணர்வு மனுவில் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டில் இருந்த போது ஒப்ரேசன் ரிவிரெஸ ஊடாக யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குடியமர்ந்தார்கள்.

இதன்போது சாவகச்சேரி நாவற்குழி அரியாலை பகுதிகளில் இராணுவத்தால் கடத்தப்பட்டு இராணுவத்தாலேயே இவர்கள் காணமல் ஆக்கப்பட்டிருந்தார்கள் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.