Home / இந்தியச்செய்திகள் / நாடு முழுவதும் காய்ச்சலுக்கு 434 பேர் பலி!

நாடு முழுவதும் காய்ச்சலுக்கு 434 பேர் பலி!

நாடு முழுவதும்,காய்ச்சல்,434 பேர்,பலி

நாடு முழுவதும், நடப்பாண்டில், 434 பேர், காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில் மத்திய அரசு, மாதம் ஒருமுறை பதிவிட்டு வருகிறது. நாடு முழுவதும், டெங்கு, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்து, மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்: நடப்பாண்டில், டெங்கு காய்ச்சலில், 1.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 199 பேர் உயிரிழந்துள்ளனர். மலேரியா காய்ச்சலில், 4.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 84 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஜப்பானிய மூளைக் காய்ச்சலில், 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 151 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று வித காய்ச்சலிலும், 434 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், டெங்கு காய்ச்சலில் மட்டும், தமிழகத்தில், 52 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.