Home / முக்கிய செய்திகள் / ஆர்கே தேர்தல் ஒத்திவைக்க வாய்ப்பு இல்லை!

ஆர்கே தேர்தல் ஒத்திவைக்க வாய்ப்பு இல்லை!

hjk2

பணப்பட்டுவாடா புகார் இருந்தாலும், ஆர்கே நகர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஆணைய வட்டார தகவல்படி திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் எனவும், பணப்பட்டுவாடாவுக்கு ஆதாரம் ஏதுமில்லை எனவும் கூறியுள்ளது.

ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கே நகர் தொகுதிக்கு டிச.,21 தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளுங்கட்சி மற்றும் தினகரன் சார்பில் அதிகளவு பணம் விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக, பா.ஜ., தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில், எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவிற்கு வாக்காளர்களுக்கு பண மழை பொழிவதாக புகார் எழுந்துள்ளது. தொகுதியில் பல இடங்களில் அடிதடி ஏற்பட்டது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இதனை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் மறுத்துள்ளன. மேலும், திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் எனவும், பணப்பட்டுவாடா தொடர்பான ஆதாரம் ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளன.