Home / இந்தியச்செய்திகள் / ஆர்.கே.நகரில் டாஸ்மாக் மூடப்படும் –

ஆர்.கே.நகரில் டாஸ்மாக் மூடப்படும் –

election-commision

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் (டிச. 19) ஓய்கிறது. இதற்குப் பிறகு, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்தவோ, யாரும் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் தொடர்பான பிரசாரங்களை எந்தவொரு ஊடகங்களின் வாயிலாகவும் வெளியிடக் கூடாது.

தேர்தல் பிரசாரம் குறித்து இசை நிகழ்ச்சி உள்பட எந்தவொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால், இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது அவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று மாலை 5 மணி முதல் 21ம் தேதி மாலை வரை ஆர்.கே.நகரில் டாஸ்மாக் மூடப்படும் எனவும், தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை (டிச. 19) மாலை 5 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட வாகன அனுமதிகள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.