Home / முக்கிய செய்திகள் / சமூக வலைதளங்களால் ஆபத்து: ஒபாமா

சமூக வலைதளங்களால் ஆபத்து: ஒபாமா

harrry

ஒபாமாவை பேட்டி காணும் இளவரசர் ஹாரி.

சமூக வலைதளங்களால் சமுதாயத்துக்கு ஆபத்து நிலவுவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.
பிரிட்டனின் பிபிசி வானொலிக்காக ஒபாமாவை அந்த நாட்டு இளவரசர் ஹாரி பேட்டி கண்டார். அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒபாமா அளித்த முதல் பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிசி வானொலியில் புதன்கிழமை ஒலிபரப்பான அந்த பேட்டியில் ஒபாமா கூறியுள்ளதாவது:
சமூக வலைதளங்களால் இந்த சமுதாயத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அத்தகைய ஆபத்துகளில் ஒன்று, உண்மைக்கு முற்றிலும் மாறான தகவல்களை மக்களுக்கு அளிக்க முடிவதுதான்.
ஒரு குறிப்பிட்ட சமூக வலைதளக் குழுவில் பதிவிடப்படும் தகவல்கள், முழுக்க முழுக்க அந்தக் குழுவின் சார்பில், ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். ஆனால், உண்மை நிலவரம் அந்தக் குழுவில் பதிவிடப்பட்டதற்கு நேர்மாறாக இருக்கும்.
இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்த்து, பல்வேறு தரப்பட்ட கருத்துகளையும் வெளிக் கொணரும் அதே வேளையில் சமுதாயங்களிடையே பிளவை ஏற்படுத்தாத வகையில் சமூத வலைதளத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.
அதிபர் பதவியிலிருந்து வெளியேறியதிலிருந்து, தற்போது என்னால் தாமதமாக எழுந்து, பொறுமையாக வேலைகளை செய்ய முடிகிறது. இப்போது அதிக பரபரப்பில்லாமல் என்னுடைய நேரத்தை என் விருப்பப்படி செலவிட முடிவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் ஒபாமா.