Home / புதிய கொசுறுச்செய்திகள் / ஜெருசலேம் “வீட்டோ’ மூலம் ரத்து !

ஜெருசலேம் “வீட்டோ’ மூலம் ரத்து !

veto

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவைத் திரும்பப் பெறக் கோரும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை, தனது “வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.
கடந்த 6 ஆண்டுகளில் இந்த அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாகவும், தற்போது டெல்-அவிவ் நகரிலுள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவிருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாதம் 6-ஆம் தேதி அறிவித்தார்.
இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு நாடுகளில் இந்த முடிவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.