Home / இலங்கைச்செய்திகள் / புலம்பெயர்ந்தோரில் இந்தியா முதலிடம்!

புலம்பெயர்ந்தோரில் இந்தியா முதலிடம்!

hjk3

பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துள்ளோர் பட்டியலில், 1.7 கோடி பேருடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐ.நா., சபையில், சர்வதேச புலம் பெயர்ந்தோர் அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் விபரம்: உலகம் முழுவதும் பலர், தாங்கள் பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்வது, 15 ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், புலம் பெயரும் நாடுகளில், மக்கள் தொகை அதிகரிக்கிறது; அது, அந்த நாடுகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. கடந்த, 2000 – 15 வரையிலான காலத்தில், வட அமெரிக்காவின் மக்கள் தொகையில், 42 சதவீதம் புலம் பெயர்ந்தவர்களாக உள்ளனர். அதே நேரத்தில், ஐரோப்பாவுக்கு புலம் பெயர்வது தடுக்கப்பட்டதால், அங்கு மக்கள் தொகை குறைந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக, பிறந்த நாட்டை விட்டு, மற்றொரு நாட்டுக்கு புலம் பெயர்வதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த, 1.7 கோடி பேர், வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அதில், 50 லட்சம் பேர், வளைகுடா நாடுகளில் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, 30 லட்சம் பேர், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு, தலா, 20 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக, மெக்சிகோவைச் சேர்ந்த, 1.3 கோடி பேர் மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த, 1.10 கோடி பேர்; சீனாவைச் சேர்ந்த, 1 கோடி பேர்; வங்கதேசத்தைச் சேர்ந்த, 70 லட்சம் பேர்; சிரியாவைச் சேர்ந்த, 70 லட்சம் பேர்; பாகிஸ்தான் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த, 60 லட்சம் பேர், மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
உலகெங்கும், 25.8 கோடி பேர், தாங்கள் பிறந்த நாட்டை விட்டு, மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.