Home / இந்தியச்செய்திகள் / முஸ்லிம்ளை இந்தியா பாதுகாக்க வேண்டும்: ஒபாமா

முஸ்லிம்ளை இந்தியா பாதுகாக்க வேண்டும்: ஒபாமா

 modi

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.

‘இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், தங்களை இந்தியர்களாகவே கருதுகின்றனர்; எனவே, இந்தியா, தனது முஸ்லிம் மக்களை பேணிப் பாதுகாக்க வேண்டும்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

தில்லியில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைமைத்துவம் தொடர்பான மாநாட்டில் ஒபாமா பங்கேற்று, உரையாற்றினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடனான தனது உறவு, பயங்கரவாதம், பாகிஸ்தான், ஒசாமா பின் லேடனுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பேசினார். பின்னர், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, இந்தியா குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்து, அவர் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகம் மிகப் பெரியதும் ஒன்றுபட்டதுமாகும். இங்குள்ள முஸ்லிம்கள், தங்களை இந்தியர்களாகவே கருதுகின்றனர். வேறு சில நாடுகளில் இதே நிலை இருப்பதில்லை என்பது துரதிருஷ்டவசமானதாகும். எனவே, இந்தியா தனது முஸ்லிம் மக்களை பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கருதுகிறேன் என்றார் ஒபாமா.