Home / இலங்கைச்செய்திகள் / LTTE-யின் தங்கக்குவியல், பணமலையை தேடி – ராணுவம்

LTTE-யின் தங்கக்குவியல், பணமலையை தேடி – ராணுவம்

முல்லைத்தீவில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றைத் தேடி அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த அகழ்வு நடவடிக்கையை வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 7 மணிவரை போலீசார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை வலைஞர்மடம் எல்லைப் பகுதியில் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிரடிப்படையினரின் சிறப்புப் பாதுகாப்புக்கு மத்தியில், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற  நீதிபதி ரி பரஞ்சோதி முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப்படையினருக்கு அடிப்படையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் விடுதலைப்புலிகளால் நூற்றுக்கணக்கான கிலோகிராம் தங்கம் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் கிடைக்கப்பெற்றது.

இதன் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அகழ்வு நடவடிக்கையின்போது, தங்கம் இருப்பதாக கூறப்பட்ட இடங்களில் எந்தவித பொருட்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகழ்வு பணிகள் நீதிபதியின் உத்தரவுக்காக நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து வியாழக்கிழமை நேரமில்லாததால், ஆயுதம் உள்ளதாக தெரிவிக்கப்படட்ட பகுதியைத் தோண்டுவதற்கு வேறொரு நாள் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.