Home / முக்கிய செய்திகள் / புடவை அணிந்து மாரத்தானில் ஓடி கின்னஸ் சாதனை!

புடவை அணிந்து மாரத்தானில் ஓடி கின்னஸ் சாதனை!

1

 

நம்மில் பலர் புடவை கட்ட சலித்துக் கொள்வோம். சல்வார், ஜீன்ஸ், லெஹங்கா, குர்தி, எத்னிக் மற்றும் வெஸ்டர்ன் உடைகளின் பக்கம் நமது கவனம் திசைமாறிவிட்டது. பள்ளி அல்லது கல்லூரி ஃபேர்வெல் தினங்களில் புடவை கட்டும் பழக்கம் இருந்துவருகிறது. பண்டிகைகள், குடும்ப விழாக்கள், குலதெய்வ வழிபாடு, கோவில், திருமணம் மற்றும் விவேஷ தினங்களில் மட்டும் சேலை அணிகிறார்கள் இன்றைய யுவதிகள்.

சேலை கட்டுவது என்றாலே தெறித்து ஓடுவோம் நாம். ஆனால் அந்த சேலையைக் கட்டிக் கொண்டு ஜெயித்து காண்பித்துள்ளார் ஒரு பெண்மணி. இன்றைய அவசர யுகத்தில் பலர் ஒதுக்கி வைத்த சேலையைக் கட்டிக் கொண்டு ஒருவர் சாதித்துள்ளார் என்பது ஆச்சரியம்தானே. அப்படி என்ன சாதனை? யார் அவர்?

ஒன்பது கஜம் புடவையைக் கட்டிக் கொண்டு மாரத்தான் போட்டியில் கலந்து குறைந்த நேரத்தில் ஓடி வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜெயந்தி சம்பத்குமார். இவர் பி.டெக் எம் எஸ் கம்யூட்டர் சயின்ஸ் படித்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பிரின்ஸிபால் மேனேஜராக பணி புரிகிறார்.

எப்படி இது சாத்தியமானது என்று அவர் கூறினார் ‘எனக்கு கைத்தறி புடவைகள் ரொம்ப பிடிக்கும். விதம் விதமாக வாங்குவேன். என்னுடைய அலமாரியில் பல ஊர்களிலிருந்து வாங்கிச் சேகரித்த அழகு டிசைன்களில் பலவிதமான கைத்தறி சேலைகள் உண்டு. எந்த ஊருக்குப் போனாலும் கட்டாயம் ஒரு நல்ல சேலை வாங்கிட்டு வருவேன். ஆனால் அவற்றை உடுத்துச் செல்ல நேரமில்லாமல் அப்படியே இருந்து வந்தது.

ஒவ்வொரு ஊர் ஸ்டைல்ல புடவையைக் கட்டிப் பார்த்து முயற்சி செய்தப்போ, அது செளகரியமாக இல்லை. அதுக்கப்பறம்தான் மடிசார் கட்டிக் கொள்ளலாம், ஒன்பது கஜம் உள்ள புடவை சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன். நான் தற்போது ஹைதராபாத்தில் இருந்தாலும் எனக்கு சொந்த ஊர் சென்னை தான்.

அதன் பிறகு தினமும் காலை 5 மணிக்கு புடவை கட்டிட்டு பயிற்சியை தொடங்குவேன். மாரத்தான் போட்டில கலந்துக்க இன்னொரு முக்கியமான விஷயம், ஷூ. ஆனால் இப்படி புடவை கட்டிட்டு ஷூ போட்டு ஓடறது சரியா இருக்காதுன்னு அதை தவிர்த்தேன். ஹீல்ஸ் இல்லாத சாதாரணமா செருப்பு போட்டுக்கிட்டு இந்த போட்டில கலந்துக்கிட்டேன்.