Home / இந்தியச்செய்திகள் / மத கொடுமை இந்திய முஸ்லிம் மாணவர்கள்!

மத கொடுமை இந்திய முஸ்லிம் மாணவர்கள்!

 

இந்தியாவில் மதரீதியான கொடுமைக்குள்ளாகும் முஸ்லிம் மாணவர்களின் நிலை

இந்தியாவில் சமீபத்தில் வெளிவந்துள்ள புத்தகம் ஒன்றில், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் அவர்களின் மதரீதியான அடையாளத்துவத்தின் காரணமாக பெரிய பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

12 நகரங்களில் 145 குடும்பங்களிடம் பேசிய நசியா ஏரம் என்ற எழுத்தாளர், டெல்லியிலுள்ள 25 பெரிய பள்ளிகளில் படிக்கும் 100 குழந்தைகளிடமும் “மதரிங் எ முஸ்லீம்” என்ற தனது புத்தகத்திற்கான ஆய்வு பணியின்போது உரையாடினார். அதில் அவர், ஐந்து வயதான முஸ்லிம் குழந்தைகள்கூட மதரீதியான தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறுகிறார்.