Home / இந்தியச்செய்திகள் / ஊழலை ஒழிப்போம் :கமல்

ஊழலை ஒழிப்போம் :கமல்

 ஊழலை,ஒழிப்போம்,கமல் சூளுரை
 புதிய கட்சி துவக்கி உள்ள கமல் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் .அப்போது அவர் ஊழலை ஒழிப்போம் என சூளுரைத்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு

இவ்வளவுநாள் எங்கிருந்தீர்கள் ?

இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன் இனிமேல் உங்கள் இல்லங்களில்
நம்பி வரலாமா எத்தைனை நாள் தாக்குபிடிப்பீர்கள்? 
என் மூச்சு உள்ளவரை தாக்கு பிடிப்பேன்?
உங்கள் வழி காட்டியார்?
எனக்கு அம்பேத்கர்,காந்தி, சந்திரபாபு , பினராயி விஜயன், கெஜ்ரிவால் ஏன் ஓபாமாவை பிடிக்கும் . என்னை பகுத்திறவு வாதி என்று கேலி செய்வார்கள் அது உண்மை தான் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை பார்த்து தான் விஸ்வரூபம் எடுத்துள்ளேன்.
நீங்கள் எப்படி ஊழலை ஒழிப்பீர்கள்
என்னை மட்டும் ஊழை ஒழிக்க சொன்னால் எப்படி, வாருங்கள் சேர்ந்தே ஒழிப்போம் ஊழலை ஒழிக்க தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தியாகம் செய்ய வேண்டும்.
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச திட்டம் நீடிக்குமா
இலவசம் இருக்காது. தகுதி.மேம்படுத்தப்படும். ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டரும் ஸ்கூட்டரும் இருக்காது. நீங்களே ஸ்கூட்டர் வாங்கித் தர வேண்டி நிலை ஏற்படும்.
தமிழை காக்க என்ன செய்வீர்கள் 
உங்கள் பேச்சு வழக்கில் தமிழ் இருந்தால் தமிழ் வாழும்
உங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு வருவார்களா
என்பெண்கள் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். (ரசிகர்களை பார்த்து) இவர்கள் எனது பிள்ளைகள். அவர்கள் அரசியலுக்கு வந்து விட்டார்கள் . போன்சாய், மரபறுணு விதை என்று கூறுகிறார்களே
எல்லா செடிகளும் போன்சாய் செடிகள் தான்.மரபணு மாற்றப்பட விதை என்பதற்கு பதில் கூறிய கமல் விதைகள் நன்றாக முளைக்கும் போது கமிஷனுக்கு ஆசைப்பாட்டால் அனைத்து விதைகளும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான் என கூறினார்.