Home / முக்கிய செய்திகள் / காகிதப்பூக்கள் மணக்காது ரஜினி, கமல் மீது சாடல்

காகிதப்பூக்கள் மணக்காது ரஜினி, கமல் மீது சாடல்

பருவநிலை மாறும் போது, ஒருசில பூக்கள் திடீரென மலரும்; பின் உதிரும். தமிழக அரசியல் களத்திலும், கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது’
என, நடிகர்கள் ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்தை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் சாடியுள்ளார்.

 Rajini, Kamal, Stalin,  காகிதப்பூக்கள் மணக்காது, ரஜினி, கமல், தமிழக அரசியல், காவிரி தீர்ப்பு, அரசியல் பிரவேசம், ஸ்டாலின் , காவிரி மேலாண்மை வாரியம், அனைத்து கட்சி கூட்டம், உச்ச நீதிமன்றம், Tamil Nadu politics, Cauvery judgment, political entry,Cauvery management board, all party meeting, Supreme Court,cauvery verdict ,paper flower

அசைக்க முடியாது

அவரது அறிக்கை: தி.மு.க., குடும்பக் கட்சி என, வெளியில்இருந்து விமர்சனம் வரும் போதெல்லாம், ‘இது, குடும்ப கட்சி தான்;

பல லட்சம் குடும்பங்கள் ஒன்றி ணைந்து, பாடுபடும் கட்சி தான்’ என, சொல்கிறோம். அதற்கு காரணம், குடும்ப பாசம் நிறைந்த, கொள்கை உறவுகளாக, தொண்டர்கள் இருப்பதால் தான். தி.மு.க.,வை, எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. பருவநிலை மாறும் போது, ஒருசில பூக்கள் திடீரென மலரும்; பின் உதிரும். அது போல, தமிழக அரசியல் களத்திலும், கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால்,மணக்காது.

ஆய்வுக்கூட்டம்

தி.மு.க., என்பது, ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்,தமிழ் மக்களின் உரிமைக் கும் உணர்வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரை பாதுகாக்கும், வேலியாக உள்ள கோடி தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக, பெரும் பொறுப்புடன், ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.