Home / புதிய கொசுறுச்செய்திகள் / தமிழ் மோடி கூறியதை ஏற்க முடியாது:

தமிழ் மோடி கூறியதை ஏற்க முடியாது:

சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதை வடமாநில பேராசிரியர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அரசியல் ஆதாயம் தேடுவதற்கான அவரது கருத்தால் சமஸ்கிருதம் பழமையானது என்பதில் தாக்கம் ஏற்படாது எனவும் அவர்கள் ’கருத்து கூறி உள்ளனர்.

இன்று தாய் மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதன் மீது வட மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரின் கருத்தை அறிய முயன்றபோது

பேராசிரியர் டி.பி.துபே, வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை, அலகாபாத் மத்திய பல்கலைகழகம், அலகாபாத்: தமிழும் ஒரு புராதன மொழி. உலகின் மொழிகள் அனைத்திலும் சமஸ்கிருதம் பழமையானது என சர்வதேச அளவில் ஏற்கப்பட்டுள்ளது. இதன் மீதான ஆய்வுக்கட்டூரைகள் சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளியாகி உள்ளன. இதனால், இன்றும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் சமஸ்கிருதமே பழமையானது என போதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் கூறியது அரசியல் ஆதாயம் தேடுவதற்கானக் கருத்து. வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி விட்டு எந்த ஒரு அரசியல் கட்சியும் தென் இந்தியாவிலும் அதை விரும்பும். எனவே, தென்மாநில மக்களை மகிழ்விக்க பிரதமர் தன் கருத்தை கூறியுள்ளார். இதுபோல், அரசியல் ஆதாயம் தேட கூறப்படுவது முதன்முறையல்ல. காங்கிரஸ், இடதுசாரிகளும் மத்தியில் தம் ஆதிக்கம் இருந்தபோது வரலாற்றை திரிக்க முயன்றுள்ளன. எனவே, இதன் மீது எங்களிடம் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பிரதமர் கருத்தை எங்களால் ஏற்க முடியாது.