Home / இந்தியச்செய்திகள் / பி.என்.பி., வங்கியில் ரூ.942 கோடி மோசடி

பி.என்.பி., வங்கியில் ரூ.942 கோடி மோசடி

Nirav scam,PNB,பி.என்.பி., வங்கி

சக்கோஸ்கி நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலும் ரூ.942 கோடி கடன் மோசடி செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபர், நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெகுல் சக்கோஸ்கி நிறுவனம் மேலும் ரூ.942 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக அவ்வங்கி புகார் செய்துள்ளது. இதனையடுத்து தனியார் நிறுவனத்தின் கடன் மோசடியால் பி.என்.பி., வங்கியின் கடன் மோசடி ரூ.13,578 கோடியாக உயர்ந்துள்ளது.