Home / முக்கிய செய்திகள் / முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவிய நடராஜனின் மறைவு பேரிழப்பு : சீமான்

முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவிய நடராஜனின் மறைவு பேரிழப்பு : சீமான்

ar3

ஈழப்போரின் அவலங்களை வரலாற்று ஆவணமாக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்த ம.நடராஜனின் செயல் என்றென்றும் நினைவு கூறத்தக்கத்து என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி காக்க தனது மாணவப் பருவத்திலேயே போராட்டக்களம் கண்டு நம்மொழி செழிக்க இனம் வாழ உழைத்தப் பெருந்தகை முனைவர் ம.நடராசன் அவர்கள் உடல்நலமில்லாது காலமானச் செய்திகேட்டு மனவேதனையும், பெருந்துயரமும் ஏற்பட்டுள்ளது. அரசியல் களத்தில் அவர் ஆற்றிய பணிகளும் வரலாற்றில் முக்கியமானது.

ஈழப்போரின் அவலங்கள் தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான ஈழத்தில் கடந்த 2009ம் ஆண்டு நம் தொப்புள்கொடி உறவுகள் சிங்களப் பேரினவாதக் கரங்களால் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டபோது அதனைத் தடுக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தார். முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஈழப்போரின் வரலாற்று நாயகர்களாக திகழ்ந்த எம்மின மாவீரர்களை காலங்காலமாய் நினைவுகூறும்வகையில் ஈழப்போரின் அவலங்களை மறக்கவே கூடாத வரலாற்று ஆவணங்களாக பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தஞ்சை விளார் சாலையில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ அமைத்து தமிழின வரலாற்றில் பெருமைக்குரிய தடத்தை ஐயா நடராசன் பதித்தது எக்காலமும் நினைவுகூறத்தக்கப் பெருஞ்செயலாகும்.