Home / புதிய கொசுறுச்செய்திகள் / முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி

முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி

actor Rajini, aanmeega arasiyal,full time politician,ரஜினி, அரசியல்வாதி, நடிகர் ரஜினி , முழுநேர அரசியல்வாதி, அரசியல் வெற்றிடம்,  உத்தர்கண்ட் மாநிலம் , ஆன்மிக பயணம், ஆன்மிக அரசியல், ரஜினி அரசியல், 
Rajini, politician,   political vacuum, Uttarakhand state, spiritual journey, spiritual politics, Rajini politics,

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய நடிகர் ரஜினி அதனை நிரப்ப அரசியலில் களம் இறங்க போவதாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்த அவர், இமயமலை கிளம்பி சென்றார். தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த அவர் தொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.

அங்கு நிருபர்களை சந்தித்த ரஜினி கூறுகையில், நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. இன்னும் அரசியல் கட்சி துவக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை எனக்கூறினார்.

முன்னதாக இன்று காலை ரஜினி அளித்த பேட்டியில், ஆன்மிக பயணமாகவே டேராடூன் வந்துள்ளேன். இதில் அரசியல் ஏதுமில்லை. நடிகர் அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தற்போது தான் தெரியவந்தது. அவர் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாக கூறியிருந்தார்.