Home / புதிய கொசுறுச்செய்திகள் / ‘பாலியல்”அரசியல் செய்யாதீர்கள்’’ – லண்டனில் மோடி

‘பாலியல்”அரசியல் செய்யாதீர்கள்’’ – லண்டனில் மோடி

 பாலியல் வன்கொடுமை செய்வது சமூகதத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம், இதனால் நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது, இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி 7 நாட்கள் கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளான நிகழ்வு நாட்டையே உலுக்கியது. இதேபோல உத்தப்பிரதேசம் உன்னாவ் நகரில் இளம் பெண்ணை பாஜ எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

கதுவா, உன்னாவ் சம்பவத்தின் அதிர்வலையில் அடங்குவதற்கு சூரத் நகரில் 11வயது சிறுமி பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டார். சூரத் நகரின் பேஸ்டான் நகரில் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள பகுதியில் 11வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடலை போலீஸார் கண்டெடுத்தனர்.

அடுத்தடுத்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கதுவா சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, நீதி கிடைக்கும், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  பிரதமர் மோடி, லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

‘‘பாலியல் வன்கொடுமை என்பது மிகப்பெரிய குற்றச்செயல். . பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமைதான். இதை எவ்வாறு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்? இப்பிரச்சினையில் அரசியல் செய்யக்கூடாது. இதுபோன்ற கொடுகளை கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு பேசி அரசியல் செய்யக்கூடாது.

இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நாட்டை அவமானப்பட வைத்துள்ளது. தேசத்திற்கே அவமானம் தரக்கூடியது. இந்தியா அமைதி மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதேசமயம் பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்தியர்களை கொல்ல பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி பாகிஸ்தானுக்குதான் உடனடி தகவல் தரப்பட்டது’’ என பேசினார்.