Home / முக்கிய செய்திகள் / 2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3′ இந்தியாவில் 1 /2 கோடி ரூபாய் !

2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3′ இந்தியாவில் 1 /2 கோடி ரூபாய் !

மூன்றாம் தலைமுறை மாடலாக ‘2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3’ கார் இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரைவ் 20டீ எக்ஸ்படீஷன் மற்றும் எக்ஸ்ட்ரைவ் 20டீ லக்சுரி லைன் ஆகிய இரண்டு வகையில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் ஹெட்லைட், டெயில் லைட்டுகளின் டிசைன் முற்றிலுமாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பிஎம்டபிள்யூ அடையாளக்குரியோடு இருக்கும் முகப்பு க்ரில்லும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் 18 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. விருப்பத்தின் அடிப்படையில் 21 அங்குல அலாய் வீல்களை தேர்வு செய்யும் வாய்ப்பையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது.

இதில் இரண்டு சைலன்சர்கள் அமைத்திருப்பது முக்கிய சிறப்பம்சம். பின்னால் உள்ள எல்இடி டெய்ல் விளக்கு பார்ப்போரை ஈர்க்கும் விதமாக உள்ளது.

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரை சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. இந்த சிஸ்டம் சென்சார் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் பின்னோக்கி செல்வதற்கும், கூகிள் மேப், ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அனைத்தும் சப்போர்ட் செய்யும். மேலும் இந்த சிஸ்டத்தை வாய்ஸ் கன்ட்ரோலர் மூலம் பயன்படுத்தலாம்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் ரூ.49.99 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.